மதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து தேர்வு எழுத இருந்த 100க்கும்  மேற்ப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்வு அறையில் அமர வைத்துள்ளனர், மதியம் 1 மணிக்கு மற்ற மாணவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்துள்ளனர், ஆனால் வினாத்தாள் இல்லாததால் தேர்வு எழுத முடியாத 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மட்டும் வெளியே வராததால் சந்தேகம்  அடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். வினாத்தாள் இல்லை என்பதும், இனி தான் எழுத வைக்கப் போவதாக கூறியதையடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து தங்கள் குழந்தைகளை பார்க்க வேண்டும் என வாக்குவாதத்தில்  ஈடுபட்டதையடுத்து, சில பெற்றோர்களை தேர்வு மையத்திற்குள் சென்று பார்த்துவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து செய்தியா ளர்களிடம்  பேசிய பெற்றோர்கள் தமிழ் வழி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் எப்படி வந்தது, மதியம் 2 மணி வரை தேர்வு எழுதவில்லை எனவும், அவர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்றவர்கள் என்றும் மதியம் உணவும் உண்ணவில்லை , மேலும் மாணவ , மாணவிகள் ஒரு பயத்துடன் இருப்பதாகவும் இனி அவர்களால் சரியாக தேர்வு எழுத முடியாது எனவும் தமிழகத்தில் இன்று நடைபெற்ற இந்த தேர்வு முழுவதையும் இரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.