பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமநாதபுரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதற்க்கு முன் ஜனவரி பிப்ரவரியில் இங்கு வந்து இருந்தேன். 115 மாவட்டங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல தேவையான மத்திய அரசின் திட்டங்களான குடிநீர், சுகாதாரம், சாலை மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவை அந்த மாவட்டங்களுக்கு சென்று சேர்ந்து இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய இராமநாதாரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு வந்துள்ளேன்.

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் 75 சதவீதம் பட்டியலின மக்கள் வசிக்கும் 36 கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு மத்திய அரசு திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய வந்து இருக்கிறேன்.

தமிழகத்தை அறிந்த மத்திய IAS அதிகாரிகள், மாநில அரசின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைவருடனும் கலந்து பேசி அதை நீதிமன்றத்தில் சொல்லித்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது.

2007ல் இருந்து மத்திய மாநில அரசுகளைக் கையில் வைத்திருந்த இன்றைய எதிர்க்கட்சியினர்,

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாங்கள் காலம் தாழ்த்துவதாக சொல்வதில் உண்மையில்லை.

அன்று அவர்கள் ஆட்சியில் இருந்த போது, எந்தெந்த தேர்தல்களை எல்லாம் மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்தார்கள்? என நான் கேட்கவா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது.

தென்னக ரயில்வே சார்பில் தமிழகம் மற்றும் கேரளா பாலக்காட்டில் நடத்தப்படும் ரயில்வே பள்ளிகளைப் படிப்படியாக மூடப்படுவது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுவது குறித்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை. தெரிந்த பிறகு அது குறித்து கூறுகிறேன்.

பாதுகாப்புத் துறையில் மகளிர் பணியிடங்கள் அதிகரிப்பது குறித்து,

கோர்ட்டில் இது குறித்து நடைபெறும் வழக்குகளின் வழிகாட்டுதல்கள் படி மத்திய அரசு விரைந்து இந்த விஷயத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கும்.

பட்டாசு விபத்துக்கள் சமீப காலமாக அதிகரித்து இருப்பதற்கு மத்திய அரசின் கண்காணிப்புக் குறைபாடு என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாநில அரசில் பட்டாசு தொழிலைக் கண்காணிக்க மற்றும் பட்டாசு விபத்துக்களைத் தவிர்க்க இருக்க கூடிய சம்பந்தப்பட்ட துறையினர் தனிக்கவனம் செலுத்த வேண்டும், என்றார்.