மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மத்திய அரசின் நீட் தேர்வு என்பது சமூக நீதியை முறியடிக்கிற செயல் திட்டம் எனவும்,

அதற்க்கு மாநில அரசு மத்திய அரசுக்கு ஒத்து ஊதுகிறது. மத்திய அரசுக்கு செய்கின்ற கொத்தடிமை வேலையை மாநில அரசு கைவிட வேண்டும்,
மத்திய அரசால் வருமான வரித்துறை மூலம் பிடிப்பட்ட கருப்பு பணம் எங்கே எனவும், இந்திய பொருளாதார ஆலோசகர் அறிவிப்பு படி 10 லட்சம் கோடி வாராக் கடன் அதில் 4.5 லட்சம் கோடி வாராது எனவும் . இந்திய நாடு எல்லா வகையிலும் கொள்ளையடிக்கப்படுகிறது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு
மூலம் 48 ஆயிரம் கோடி லாபம் முகேஷ் அம்பானிக்கு செல்கிறது எனவும், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும் , அந்த கொள்கையில் ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சியுடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைவோம் எனவும், போராட்டங்களிலில் ஒன்று ப்பட்டுள்ள திமுகவுடனான உறவு தேர்தலிலும் தொடரும் எனவும், காவிரி மேலாண்மை விவகாரத்தில் நீதிமன்றமே நிறைவேற்றும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவிந்தார்.