மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்

மூலம் 128 பயனாளிகளுக்கு வீடுகளை கட்டி முடிக்கப் பெற்று அவர்களுக்கான வீட்டு சாவியினையும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்க்கான ஆணையினையும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்க்கான ஆணை 92 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஆணையினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர். ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் . ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ், நாடாளுமன்ற உறுப்பினர். கோபாலகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.