மதுரை விளக்குத்தூண் இந்தியன் வங்கியில் 10 லட்சம் கொள்ளை. வங்கி ஊழியர் ஒருவரின் பணிஓய்வு பாராட்டு விழாவில் பங்கேற்ற போது மர்ம நபர் கைவரிசை.

மதுரை விளக்குத்தூண் இந்தியன் வங்கிக் கிளையில் காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது,
வங்கி மாடியில் ஊழியர்ஒருவரின் பணிஓய்வு பாராட்டு விழாவில் சகஊழியர்கள் பங்கேற்றபோது மர்ம நபர் காசாளரின் அறையில் நுழைந்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளான், ஊழியர்கள் இல்லாததை பயன்படுத்திஅடையாளம் தெரியாதநபர் பணத்தை கொள்ளையடித்துள்ளார் . இது குறித்து இந்தியன் வங்கி மேலாளர் சினீவாசன் விளக்குத்தூன் காவல்துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தியன் வங்கி சி.சி.டி.வி பதிவு காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.