மதுரை வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் குவாரியில் கல்சரிந்து 3 பேர் உயிரிழப்பு காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களையும் நேரில் சந்தித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். மாவட்ட ஆட்சியர் ஆறுதல்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் கல்குவாரியில் இன்று காலை மண் சரிந்து கிருஷ்ணன் , நாகராஜ் , பரமசிவம் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர் அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர். முன்னதாக விபத்து நடந்த குவாரியை நேரில் பார்வையிட்டனர் . இறந்தவர்களின் குடும்பத்தினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.