பிரபல எழுத்தாளரும், கதையாசிரியருமான செளபா (எ) செளந்தர பாண்டியன் தனது மகனை கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்.

பிரபல எழுத்தாளர் செளபா என்ற செளந்தர பாண்டியன் , தனது மகன் விபினை அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி தோட்டத்தில் சொத்து தகறாறில் அவரது மகன் விபினை அடித்து கொன்று எரித்துச் சாம்பலாக்கி விட்டார் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் எஸ்எஸ் காலனி காவல் துறையினர் கைது செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் JM 5 யில் ஆஜர்படுத்தினர்.
தனது மகனைக் காணவில்லை என செளபாவின் மனைவி லதா பூர்ணம் கடந்த 30ந் தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து செளபாவை கைது செய்து விசாரணை செய்ததில் உண்மை வெளிவந்துள்ளது.
செளபாவை மே 24 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உமா உத்தரவிட்டார்.